ஒரே ஓவரில் ஆட்டம் குளோஸ்.. “இதுதான்டா கம்பேக்”.. லக்னோவை அலறவிட்ட நடராஜன்.. பழையபடி யார்க்கர் கிங் வந்தாச்சு… டெல்லி அணிக்கு அடித்த ஜாக்பாட்…!!!

By Rajeshwari on சித்திரை 2, 2026

Spread the love

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் டி. நடராஜன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சீசனில் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியாமல் போன நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியிலேயே 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார்.

இது குறிப்பாக அதிரடியாக விளையாடிய அப்துல் சமாத் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் வீழ்த்தி லக்னோ அணியின் ஸ்கோரைக் கட்டுப்படுத்தினார். இந்தப் போட்டியில் நடராஜனின் பந்துவீச்சு மிகவும் நிதானமாகவும், திட்டமிட்டபடியும் இருந்தது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் அதிவேகமாகப் பந்துவீசாமல், தனது துல்லியமான லைன் மற்றும் லெந்த் மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

   

இந்நிலையில் யார்க்கர் பந்துகள் மட்டுமின்றி, பவுன்சர் மற்றும் ஸ்லோயர் பந்துகளையும் மிகச்சரியாகப் பயன்படுத்தி 8 டாட் பால்களை வீசினார். டெல்லி அணி தன் மீது வைத்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் விளையாடியுள்ள நடராஜன், இந்த சீசன் முழுவதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.