இப்பதானே திருமணம் முடிந்தது?…. அதுக்குள்ள இப்படியா?… ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை!… வீடியோ இதோ!…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரித்திகா தற்பொழுது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முன்னணியில் சென்று கொண்டிருக்கும் நாடகங்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது. இதனால் இந்த சீரியல் முக்கியமாக இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.
தற்பொழுது இந்த சீரியல் மிக விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்தவர் நடிகை ரித்திகா. இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணப்புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறினர்.
இதைத்தொடர்ந்து நடிகை ரித்திகா மாலத்தீவிற்கு ஹனிமூன் சென்று அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து தற்பொழுது இவர் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘மீண்டும் தான் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தாவாக களம் இறங்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவரை திரையில் காண ஆர்வத்துடன் உள்ளனர்.
இதோ அந்த பதிவு….
View this post on Instagram