ரஜினிக்கு பதில் ‘எந்திரன்’ திரைப்படத்தில் நடிக்கவிருந்த முக்கிய பிரபலம்… இவர் நடிச்சிருந்தா  படம் இன்னும் சூப்பரா இருந்திருக்குமே…

ரஜினிக்கு பதில் ‘எந்திரன்’ திரைப்படத்தில் நடிக்கவிருந்த முக்கிய பிரபலம்… இவர் நடிச்சிருந்தா  படம் இன்னும் சூப்பரா இருந்திருக்குமே…

இந்திய சினிமாவில் அறிமுகம் தேவைப்படாது ஒரே பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான பல படங்களை இயக்கி வருகிறார். 1993ல் வெளியான ஜென்டில்மேன் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இவர் இதைத் தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்த ஏழு வருடங்களில் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமூக கருத்துக்களை அதிகம் சொல்லும் கதைகளை தான் அவர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறா.ர் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதுவரை அவர் பல டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஹீரோவை வைத்து மட்டும் அவரால் இன்று வரை படம் பண்ண முடியவில்லை. அவர் வேறு யாரும் இல்லை. நம்ம தல அஜித் தான்.

இவரை வைத்து ஒரு முறையாவது படம் பண்ணி விட வேண்டும் என்பது சங்கரின் ஆசை. ஜீன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த நான்கு திரைப்படங்கள் அஜித்திற்காக தான் எழுதினாராம். ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் அஜித்தால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அப்படித்தான் எந்திரன் திரைப்படமும். எந்திரன் திரைப்படத்தின் கதையை எழுதும் போது அஜித்தின் ஸ்டைலை மனதில் வைத்து தான் இயக்குனர் சங்கர் எழுதியுள்ளார்.

ஆனால் அஜித்திடம் கதை சொல்லும் பொழுது இது ஒரு பிரம்மாண்ட படம் தோல்வியடைந்தால் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நஷ்டம் அதனால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஷங்கர் கதையை கூறியுள்ளார்.

அவர் நடிப்பில் இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வைத்து வெற்றி பெற்றது. மேலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனையும் படைத்தது. தற்போது இத்தகவலை அறிந்த ரசிகர்கள் அஜித் ரோபோட்டாக நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து வருகின்றனர்.

Begam