விஜய்க்கு மேலும் மேலும் சோதனை..! “ஜன நாயகன்” பேனர் சரிந்து விபத்து… உயிருக்கு போராடும் அரசு ஊழியர்..!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

புதுச்சேரி அருகே நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்காக வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் (64) என்பவர், தமிழகப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தபால்காரர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு விஜய் ரசிகர்கள் வைத்திருந்த ‘ஜன நாயகன்’ பட பேனர் எதிர்பாராதவிதமாக அவர் மீது சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தனசேகரன், உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவிருந்தது. இப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்கள் பேனர்களை வைத்துள்ளனர். இதற்கிடையில், தணிக்கைச் சான்றிதழ் தாமதத்தால் படத்தின் வெளியீடு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.