சூப்பர் மார்க்கெட் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்… “ஒரு நாளில் 10 கோடி லாபம்”…கேரள லாட்டரியில் அடித்த மெகா பம்பர்…!!!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியைச் சேர்ந்த 51 வயதான பத்மநாபன் என்பவருக்கு, கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரியில் 10 கோடி ரூபாய் முதல் பரிசு விழுந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாகப் பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றி வரும் இவர், பாலக்காட்டில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் தற்செயலாக 250 ரூபாய் கொடுத்து SB 517026 என்ற எண் கொண்ட சீட்டை வாங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை (28-03-26) நடைபெற்ற குலுக்கலில், சுமார் 40 லட்சம் பேருக்கு மேல் போட்டியிட்ட நிலையில், பத்மநாபனைத் தேடி இந்த அதிர்ஷ்டம் வந்துள்ளது.

இந்த இன்ப அதிர்ச்சியில் பத்மநாபன் மட்டுமன்றி, அவரது மனைவி சுமிதா மற்றும் இரு பிள்ளைகளும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வழக்கமாக லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லாத இவர், குறிப்பிட்ட சில சீசன்களில் மட்டுமே சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நேர்மையாக நடத்தி வரும் நிலையில், தமக்கு விழுந்த 10 கோடி ரூபாய் பரிசுக்கான சீட்டை உரிய பாதுகாப்பு கருதி பரப்பனங்காடியில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளரிடம் பத்மநாபன் ஒப்படைத்துள்ளார். ஒரு சாமானிய தொழிலாளியின் வாழ்க்கையை ஒரே நாளில் இந்த பம்பர் லாட்டரி தலைகீழாக மாற்றியுள்ளது.