கைகளைக் கட்டி, கழுத்தை நெரித்து .. சர்வதேச தன்னார்வலர்களைத் தரையில் தள்ளி மிதித்த இஸ்ரேல் ராணுவம்.. உலக நாடுகளை உலுக்கிய பகீர் வீடியோ..!

By Swetha on வைகாசி 23, 2026

Spread the love

காசாவிற்குள் மனிதநேய உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தும் இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக, ‘சுமூத் புளோட்டிலா’ என்ற அமைப்பைச் சேர்ந்த சர்வதேச மனிதநேய ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், சர்வதேச உதவிப் பணியாளர்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது, தங்களுக்கு எதிராகப் பேச முயன்ற ஒரு பெண் ஆர்வலரின் கழுத்தைப் பிடித்து நெரித்த பாதுகாப்புப் படையினர், அவரைத் தரையில் கொடூரமாகத் தள்ளி மிதித்துள்ளனர். மேலும், இஸ்ரேலிய அமைச்சர் பென் க்வீர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், கைது செய்யப்பட்ட சர்வதேச மனிதநேய ஆர்வலர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்டு, அவர்கள் மண்டியிட வைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

   

இத்தகைய கொடூரமான வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச உதவிப் பணியாளர்கள் மீது இஸ்ரேல் இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இது முதன்முறையல்ல என்றும், இதற்கு முன்பாக 2003ஆம் ஆண்டிலும் பாலஸ்தீனியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டபோது இதேபோன்ற அத்துமீறல்கள் நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.