விமானம் நடுவானில் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் துணை விமானி தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரின் திறமையான மற்றும் சமயோசிதமான செயல்பாட்டால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அதில் பயணம் செய்த பயணிகள் உட்பட அனைவரும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டனர்.
அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் நடுவானில் நடந்த இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் உலுக்கலிலும் ஆழ்த்தியுள்ளது. காசா மீதான தாக்குதல் மற்றும் ஈரான் மீதான போர் நடவடிக்கை காரணமாக இஸ்ரேல் மீது வளைகுடா நாடுகள் கடுங்கோபத்தில் உள்ள சூழலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானத்திலிருந்த 174 பேரின் உயிர்களையும் துணிச்சலாகக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். “எனது கணவர் மட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் காப்பாற்றப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி” என்று கேப்டன் ஸ்மித்தின் மனைவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
