நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்…! பேருந்தை முந்த முயன்றபோது நேர்ந்த பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

By Swetha on ஆனி 24, 2026

Spread the love

கோவை ஆத்துப்பாலம் பகுதியில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஓட்டுநர் உரிமம் பெறாத இரு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, வளைவுப் பகுதியில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது.

இந்த விபத்தின்போது வாகனத்தை ஓட்டிய சிறுவன் சாலையின் ஓரமாக விழுந்து தப்பிய நிலையில், பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு சிறுவன் ஓடும் பேருந்தின் பின்சக்கரத்திற்கு அருகே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அச்சிறுவனின் உடலின் மீது ஏறி இறங்கியதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த துயரமான சம்பவம் உணர்த்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.