திருமண கோலத்தில் நடிகை நயன்தாராவை போலவே இருக்கும் பெண்… அப்படியே ஜெராக்ஸ் போல இருக்காங்களே… நீங்களே பாருங்க…

திருமண கோலத்தில் நடிகை நயன்தாராவை போலவே இருக்கும் பெண்… அப்படியே ஜெராக்ஸ் போல இருக்காங்களே… நீங்களே பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

வாடகை தாய் முறை மூலம் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் ‘கனெக்ட்’. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இறைவன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் இதைத்தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் போன்று ரசிகர், ரசிகைகள் அவ்வப்போது உடையணிந்து புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும் உடனே செம வைரல் ஆகிவிடுகிறது.

அந்த வகையில் தற்பொழுது திருமண கோலத்தில் நடிகை நயன்தாரா எப்படி இருந்தாரோ அதே போல அச்சாசலாய் நயன்தாராவின் ரசிகை ஒருவர் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர். ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அந்தப் பெண் பார்ப்பதற்கு அப்படியே நயன்தாராவின் ஜெராக்ஸ் போலவே உள்ளார். இதோ அந்த வைரல் புகைப்படம்….

Begam