நடிகை சில்க் ஸ்மிதாவை அச்சு அசலாய் உரித்து வைத்தது போல் இருக்கும் ஒரு பெண்ணின் டிக் டாக் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை சில்க் ஸ்மிதா இந்த பெயரை கேட்டாலே சொக்கிப் போவோர் ஏராளம். இதற்கு காரணம் அவரின் சொக்க வைக்கும் கண்கள், செக்கச் சிவந்த இதழ்கள், கிறங்கடிக்கும் கவர்ச்சியே. 80 களில் தொடங்கி 90 வரை தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தனது 17 ஆண்டு கால சினிமாவில் தமிழ், ஹிந்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வினுச்சக்கரவர்த்தி அவர்களால் ‘வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் ‘சில்க்’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இதைத்தொடர்ந்து திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1996 இல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அவருடைய பெயரை கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.
இவருடைய வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இதுவரை எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழில் வந்து விட்டார்கள். ஆனால் யாராலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சில்க் ஸ்மிதாவை போன்ற ஒரு பெண் டிக் டாக் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். அவர் பார்க்க அப்படியே நடிகை சில்க் ஸ்மிதாவை மாதிரியே உள்ளார். இதை பார்த்து சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள் ‘சில்க் ஸ்மிதா மீண்டும் பிறந்து வந்துவிட்டார் போல இருக்கே’ என்று குஷியில் உள்ளனர். இதோ அவரின் வீடியோ உங்களுக்காக…