50 நாட்களைக் கடந்து சாதனை படைத்த ‘லவ் டுடே’ திரைப்படம்!… மொத்த வசூல் இத்தனை கோடியா?….

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நவம்பர் 4ம் தேதி வெளிவந்து சூப்பர் ஹிட் ஆக தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘லவ் டுடே’. இத்திரைப்படத்தில் நடிகை இவானா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘லவ் டுடே’ திரைப்படத்தை இவர் இயக்கியும் நடித்துமுள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் மாபெரும் வசூலை வாரி குவித்து வருகிறது.
இதை தொடர்ந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இத்திரைப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்பொழுது வரை 90 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சூப்பர் ஹிட் வெற்றியடைந்துள்ளது.