விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படத்திற்காக சென்னை மற்றும் நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிக அதிக விலைக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. தற்போது படம் ரிலீஸ் ஆகாத சூழலில், சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 4.50 லட்சம் ரூபாய் வரையிலான முன்பதிவுத் தொகையைத் திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்களுக்குத் திருப்பி அளித்து வருகின்றனர்.
படம் தடைபட்டாலும், டிக்கெட் கட்டணத்தை இவ்வளவு பெரிய அளவில் ரீபண்ட் செய்வதில் இப்படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். தணிக்கை துறையின் கெடுபிடிகளால் படக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அரசியல் ரீதியாகவும் இந்தப் படம் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. வெளியீடு தள்ளிப்போனாலும், இந்தத் தொகையைத் திரும்பப் பெறும் விவகாரம் இந்தியத் திரையுலகில் ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
