பவுன்ஸர்களை தாண்டி ஜூனியர் என்டிஆர் ஐ கட்டிப்பிடித்த ரசிகர்… அவர் என்ன செய்தார் தெரியுமா?… வீடியோ உள்ளே…

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் ஆர் ஆர் ஆர். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருந்தார். தெலுங்கு சினிமாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்ததே இத்திரைப்படத்திற்கு போதுமான விளம்பரத்தை வழங்கியது.
அதோடு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் கிளப்பியது. படம் வெளியான முதல் நாளிலேயே 257 கோடி ரூபாய் வசூலித்தது. இதை தொடர்ந்து 12 நாளில் 1000 கோடி ரூபாயை எட்டி சாதனையும் படைத்தது. இந்த வெற்றியில் ஜூனியர் என்டிஆர்க்கு பெரும் பங்கு உண்டு.
சமீபத்தில் கூட ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் நடிகர் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டார். பவுன்சர்களுடன் விழாவிற்கு வந்த ஜூனியர் என்டிரை பார்த்த ரசிகர் ஒருவர், பவுன்சர்களையும் தாண்டி ஜூனியர் என்டிரை நெருங்கி கட்டிப்பிடித்தார்.
அப்பொழுது பவுன்சர்கள் அவரை இழுத்த நிலையில், வேண்டாமென தடுத்து அவரை கட்டிப் பிடித்து புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
#JRNTR Love Towards His Fans🥺❤️pic.twitter.com/mOBwVh8pBJ
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 18, 2023