
CINEMA
‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்… இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது?…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. அப்படி ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் பிச்சைக்காரன். இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீசை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ரோட்டில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களை இலவசமாக வழங்கினார்.
இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சித்தார்த் தான். இயக்குனர் சசி பிச்சைக்காரன் படத்தை பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்பொழுது அதில் கூறியுள்ளதாவது, ‘பிச்சைக்காரன் என படத்துக்கு பெயர் வைப்பதற்கு முன்னால் படத்தின் கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாகவும், ஆனால் கதை எனக்கு புரியவில்லை என சித்தார்த் கூற விஜய் ஆண்டனி படத்தில் நடித்ததாகவும்’ கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்காததுக்காக நடிகர் சித்தார்த் வருத்தப்பட்டதாகவும் இயக்குனர் சசி கூறியுள்ளார்.