அதிர்ச்சி..! பெற்ற தாயை அடித்த அண்ணன்.. மனைவி, 2 குழந்தைகளுடன் சேர்த்து… உடல்களை 18 துண்டுகளாக வெட்டி நதியில் வீசிய தம்பிகளின் ‘பகீர்’ வாக்குமூலம்..!!

Spread the love

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் என 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த கிருஷ்ண முராரி என்பவர் கடந்த மே 5-ஆம் தேதி தனது தாயை அடித்துள்ளார். இதுகுறித்து அந்தத் தாய், மகாராஷ்டிராவில் இருந்த தனது மற்றொரு மகன் விகாஸ் குப்தாவிடம் அழுது புலம்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விகாஸ், தனது நண்பன் தீபக் என்பவருடன் ஊருக்கு வந்துள்ளார். கடந்த மே 7 அன்று வீட்டில் பங்குச் சந்தை குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், விகாஸும் அவனது நண்பனும் சேர்ந்து கிருஷ்ண முராரியைக் கத்தியால் குத்திக் கொன்றனர்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அந்த கொடூர கும்பல் இரக்கமின்றி குத்திக் கொலை செய்தது. அதன் பிறகு, கிருஷ்ண முராரியின் வாய் பேச முடியாத தம்பியான ராகுல், கோடாரியால் 4 பேரின் உடல்களையும் 18 துண்டுகளாக வெட்டியுள்ளார். இந்த பயங்கரக் கொலைகள் நடக்கும்போதும், உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்படும்போதும், அவர்களின் பெற்ற தாயும், தம்பிகளின் மனைவிகளும் வீட்டிலேயே இருந்து அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்துள்ளனர். பின்னர், உடலின் பாகங்களை சூட்கேஸ் மற்றும் சாக்கு மூட்டைகளில் அடைத்து, ஸ்கூட்டி மூலம் கொண்டு சென்று நதியிலும் கால்வாயிலும் வீசியுள்ளனர்.

கொலையை மறைக்க வீட்டில் இருந்த இரத்தக் கறைகளைக் கழுவி சிமெண்ட் பூசியுள்ளனர். நதியிலிருந்து மீட்கப்பட்ட ஒரு குழந்தையின் அங்கன்வாடி சீருடை தையல் அடையாளத்தை வைத்தும், சிசிடிவி மற்றும் மொபைல் சிக்னல்களை வைத்தும் போலீஸார் தம்பி விகாஸ் குப்தாவை கைது செய்தனர். விசாரணையில், அண்ணனின் நடத்தையால் ஆத்திரமடைந்து இந்த கொலையைச் செய்ததாக அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஹைதராபாத்தில் வேலை செய்யும் மற்றொரு தம்பியான சுபாஷ் குப்தாவுக்கு இதில் தொடர்பில்லை என்பதால், அவர் தற்பொழுது இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து வருகிறார். இந்த கொடூர வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் தொல்லை… தவெக நிர்வாகி அதிரடி கைது..!!

மதுரை கீழமாத்தூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின்…

2 minutes ago

‘ஓடுவதை நிறுத்து’.. ஓடும் ரயிலில் அநாகரிகம்.. 3 முறை தப்பாக தோட்ட காமுகன்.. பெண் கொடுத்த அதிரடி ‘நோஸ் கட்’.. இணையத்தில் வைரலாகும் ‘சிட்னி இரயில்’ மோதல் வீடியோ..!!

சிட்னியில் ஓடும் ரயிலில் பயணித்த பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலும், அதற்கு அவர் காட்டிய துணிச்சலான எதிர்ப்பும் தற்பொழுது…

3 minutes ago

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

11 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

12 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

14 minutes ago