கர்நாடக மாநிலம் மைசூருவில் சாத்தகல்லி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்குத் தனது குழந்தையைச் சிகிச்சைக்காக அழைத்து வந்த நபர், காலணிகளுடன் உள்ளே நுழைய முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர், சுகாதாரத்தைக் கருதி காலணிகளை வெளியே விடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நபர், “நீங்கள் மட்டும் ஏன் உள்ளே காலணி அணிந்துள்ளீர்கள்?” எனக் கேட்டு மருத்துவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபரும் அவருடன் வந்த உறவினரும் சேர்ந்து மருத்துவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
