ஆஸ்கார் வென்ற முதுமலை தம்பதியை வாழ்த்திய முதமைச்சர்… பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்திய தருணம்… தீயாய் பரவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளே…

By Begam

Published on:

95வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது விழாவில் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட படைப்புகள் போட்டியிட்டன. அதில் இந்தியாவின் சார்பில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டு நாட்டு பாடல், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ட் ஆகியவை போட்டியிட்டன. முதலில் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.

   

இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து போட்டியிட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.

அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர்.

இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்களும் , வீடீயோக்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ….