விஜே அர்ச்சனா மகள் சாராவுக்கு கிப்ட் கொடுத்த பிரபலம்… பரிசை திறந்து பார்த்து கதறி அழுத ஸாரா… என்ன இருந்தது தெரியுமா?…

விஜே அர்ச்சனா மகள் சாராவுக்கு கிப்ட் கொடுத்த பிரபலம்… பரிசை திறந்து பார்த்து கதறி அழுத ஸாரா… என்ன இருந்தது தெரியுமா?…

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் ‘அர்ச்சனா’. அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக சிறந்த பங்காற்றினார். பின்னர் ஜீ தமிழ்  தொலைக்காட்சிக்கு தாவினார். இவர் ‘வாவ் லைப்’ என்ற youtube சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் தனது தங்கை மற்றும் மகளுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.அதிலிருந்து அவரை வெறுக்கும் ஒரு பட்டாளமே தனியாக உருவாகியுள்ளது. இவர் 2004 ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ”சாரா’என்று ஒரு மகள் உள்ளார். தாய்க்கு பக்க பலமாக இருக்கும் இவர் தாயுடன் சேர்ந்து தொகுப்பாளினியாக  பணியாற்றி வருகிறார்.

அர்ச்சனாவும் அவர் மகள் சாராவும் இணைந்து ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் அர்ச்சனா மற்றும் சாரா. இவர்களை இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சாரா பற்றிய வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாராவுக்கு விஜய் சிலை ஒன்று கிப்ட்டாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்த சாரா யார் அனுப்பியது என்று தெரியாமல் மகிழ்ச்சியில் கதறிஅழுகிறார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….

Begam