“ஹரித்வார் டூ டெல்லி… திரளும் மக்கள் கூட்டம்…” மிரளவைத்த ‘மகாகால்’ காவடி…. இணையத்தைக் கலக்கும் பிரமாண்ட வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 1, 2026

Spread the love

ஹரித்வாரில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற காவடி யாத்திரையில், இந்த முறை சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான ‘மேக்லாரன்’ சொகுசு காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘மகாகால் காவடி’ மக்களின் பெருவாரியான கவனத்தை ஈர்த்துள்ளது. நீல நிறத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காவடியின் கூரை மீது பிரமாண்டமான சிவன் சிலையும், முன்பகுதியில் இந்திய தேசியக் கொடியும் இடம்பெற்றுள்ளன. மேலும் வண்ணமயமான விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த காவடியைக் காணவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் பக்தர்கள் பெருந்திரளாகக் கூடி வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்த சிவபக்தர்கள் குழுவொன்று, சனாதன தர்மத்தைப் பரப்பும் நோக்கில் சுமார் ஒரு மாதம் இடைவிடாது உழைத்து 6 முதல் 7 லட்சம் ரூபாய் செலவில் இந்த காவடியை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காகச் சிறப்பு டிராலியில் பொருத்தப்பட்டுள்ள இந்த காவடி, ஹரித்வாரில் தொடங்கி டெல்லியின் உத்தமன் நகர் வரை சுமார் 255 கிலோமீட்டர் தூரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. சுமார் 4 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த ஆண்டு யாத்திரையில், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மற்றொரு காவடியும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.