ஐயோ… விபத்து அல்ல கொடூரக் கொலை… பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துச் சென்று… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கர்நாடகாவில் அதிர்ச்சி…!!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஹொன்னேமாடு கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான நவீனா என்ற பெண், கார் விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம் தற்போது கொலை வழக்காகத் திருப்பம் பெற்றுள்ளது. மாண்டியா நகரில் உள்ள பழக்கடையில் பணிபுரிந்து கொண்டு, தங்கும் விடுதியில் வசித்து வந்த நவீனா, ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது நண்பர்களான அஸ்வினி, விஷ்ணு மற்றும் சிவகுமார் ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். கொம்மேரஹள்ளி அருகே கார் மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் நவீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; அவருடன் இருந்த மூன்று நண்பர்களும் லேசான காயங்களுடன் தப்பினர்.

எனினும், இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட கொலை என நவீனா குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிறந்தநாள் விழாவிற்கு அழைப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற நண்பர்கள், நவீனாவுக்கு பாலியல் தொல்லை தர முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகவும் அவரது தாய் பொம்மம்மா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கொலையை மறைத்து விபத்து போலக் காட்டுவதற்காக, நவீனாவின் உடலை காரின் முன் இருக்கையில் அமரவைத்து திட்டமிட்டு மின் கம்பத்தில் மோதியதாகவும், விபத்து நடந்த பல மணி நேரத்திற்குப் பிறகே தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

   

தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், மாண்டியா கிராமப்புற காவல் துறையினர் நவீனாவின் நண்பர்களான அஸ்வினி, விஷ்ணு மற்றும் சிவகுமார் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நவீனா இறந்தது சாதாரண சாலை விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்பது குறித்தும், குடும்பத்தினர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.