இறுதி சடங்கில் விஜயகாந்த் மகன் செய்த செயல்… கண்களையும், மனதையும் கலங்க வைத்த தருணம்.. வைரலாகும் வீடியோ…

By Begam on டிசம்பர் 30, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமின்றி, தேமுதிக கட்சியின் தலைவராகவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம்  காலை 6 மணி அளவில் காலமானார் . இந்த செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

#image_title

இதை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக  அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முன்னணி நடிகர்கள் பலரும் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவர்கள் மட்டும் இன்றி அலை கடலென மக்கள் கூட்டமும் அங்கு அலைமோதியது. இதைத் தொடர்ந்து அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

   
   

 

அங்கு நடிகர் விஜயகாந்தின் உடல் கண்ணாடி பெட்டியில் இருந்து ‘புரட்சி கலைஞர்’ கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகமும், அவரின் பிறப்பு இறப்பு தேதிகளும் இடம் பெற்ற சந்தன பேழையில் மாற்றப்பட்டு, பின்னர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் நடிகர் விஜயகாந்தின் மகன் தனது தந்தையின் மாஸ்க்கை சரி செய்து விட்ட காணொளி தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகன்களின் மீது விஜயகாந்தும், தங்களது தந்தையின் மீது மகன்களும் எவ்வளவு பாசம் வைத்திருந்துள்ளனர் என்பது நமக்கு இதன்மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதோ அந்த வீடியோ..