ஒரு படத்துக்காக இப்படி அலையனுமா..? கார்த்தியின் கால்ஷீட் வாங்க நாள் கணக்காக காத்திருந்த டாணாக்காரன் பட இயக்குனர்..!

By Mahalakshmi on ஆனி 19, 2024

Spread the love

டாணாக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தமிழ். இவர் நடிகர் கார்த்திக்கை வைத்து புதிய திரைப்படம் இயக்கப் போகிறார். அதற்கு அவர் பட்ட கஷ்டம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்திக். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . தற்போது 96 பட இயக்குனருடன் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது.

   

   

அதை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தின் வா வாத்தியாரே என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகர் கார்த்திக் ஹிட் திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். இவரின் நடிப்பில்  கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை படுதோல்வி அடைந்தது.

 

அடுத்த திரைப்படம் கட்டாயம் ஹிட் படமாக அமைய வேண்டும் என்பதற்காக முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறார். இதற்கு இடையில் சர்தார் 2, தீரன் அதிகாரம் 2 உள்ளிட்ட பார்ட் 2 படங்களிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் டாணாக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கின்றார் . இந்த திரைப்படத்தை நடிகர் கார்த்திக்கை வைத்து தான் இயக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்த தமிழ் அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றார்.

பொதுவாக 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கதை மற்றும் நடிகர்கள் அனைவரையும் வைத்து மிகவும் யோசித்து தான் படத்தை தயாரிப்பார்கள். அப்படிதான் இயக்குனர் தமிழையும் நாள் கணக்காக அலைய விட்டிருக்கிறார்கள். ஒரு வழியாக எல்லா ப்ராசஸும் முடிந்து தற்போது நடிகர் கார்த்திக் வைத்து ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்து விட்டார்கள். இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.