CINEMA
தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கோலாகலமாக கொண்டாடிய தளபதி… இதுவரை நீங்கள் பார்த்திடாத அன்ஸீன் வீடியோ…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்த வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் திரிஷா நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தளபதி ரசிகர்களுக்கு தளபதியின் பிறந்தநாள் என்றால் திருவிழா தான். அதை அவர்கள் தமிழகம் முழுவதும் பெரும் விமரிசையாக கொண்டாடுவார்கள். அந்த சமயங்களில் எடுக்கப்படும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
அந்த வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்பொழுது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ பலரும் பார்த்திடாத அந்த அன்ஸீன் வீடியோ…
Rare video of Thalapathy @actorvijay‘s Birthday Celebration ????????! #Leopic.twitter.com/45HXmcuswO
— Vijay Social Teamⱽˢᵀ (@TST_Offcl) June 7, 2023