Categories: CINEMA

அடேங்கப்பா.. படத்தோட டைட்டிலே வேற மாறி இருக்கே.. அப்போ படம் மாஸ் தான் போலயே.. வெளியான ‘Thalaivar 170’ படத்தின் டைட்டில்..

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர்  தற்பொழுதும் மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

‘லால் சலாம்’ படத்தை முடித்த பின்னர், நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தலைவர் 171 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தலைவர் 170 திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப்பச்சன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘குறி வச்சா இரை விழணும்’ என்று மாஸாக சூப்பர் ஸ்டார் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

8 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago