விஜய் 220 கோடி வாங்கும் போது.. நா மட்டும் என்ன தக்காளித்தொக்கா.. அடுத்தப்படத்திற்கு அஜித் வாங்க போகும் சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

By Archana

Published on:

கோலிவுட் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் மட்டும் தான் நல்ல கதைக் களத்தில் கோடிக்கணக்கில் வசூலில் போட்டிப் போடுவதைத் தவிர ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்குவதில் தான் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஒரு படத்தின் பட்ஜெட்டில் முக்கால் வாசி ஒரு ஹீரோவுக்கான சம்பளத்தில் சென்று விடுகிறது. ஆனால் அந்த செலவுக்கு ஏற்றார் போல் வருமானம் வருகிறதா என்றால் அது சந்தேகம் தான். அந்த ஹீரோவை அவமானப் படுத்தக் கூடாது என்பதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் இப்படம் நூறு கோடியை தாண்டி விட்டது 500 கோடியை தாண்டி விட்டது என போட்டிப் போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

222005 2ac

கோலிவுட்டில் ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக விஜய், அஜித் ஆகியோருக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. படத்தின் வசூலை தாண்டி முன்பு கூறியதைப் போல சம்பளம் வாங்குவதில் தான் அடுத்தடுத்து போட்டிப் போட்டு வருகின்றனர். முன்னெல்லாம் ஒரு ஹீரோ ஒரு ஹிட் படத்தைக் கொடுத்தப் பிறகு தான் அடுத்தப் படத்தில் சம்பளத்தை அதிகப்படுத்துவார்கள். ஒரு வேளை தோற்றுப் போனால் அதே சம்பளத்தை தான் வாங்குவார்கள். அந்த நிலைமையும் தற்போது மாறியிருக்கிறது. தயாரிப்பாளர்களும் ஹீரோக்களின் ரசிகர் பட்டாளத்திற்காக அவர்களை சமாளிக்க முடியாமல் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து வருகின்றனர்.

   
gaplsy boaatnkm

அந்த வகையில், அஜித் தன்னுடைய அடுத்தப் படத்திற்காக 165 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியானது. ஆனால் இரண்டுமே விமர்சன ரீதியாக சில பின்னடைவுகளை ஏற்படுத்தின. இன்று வரையிலும் இரண்டு படங்களிலும் எது அதிகளவு வசூலை வசூலித்தது என்பதை இரு படங்களின் தயாரிப்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. வாரிசு படம் வெளியாவதற்கு முன்பே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிக்கத் தொடங்கினார் விஜய். அதே நேரம் அஜித்தும் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் தான் வெளியானது. பிறகு அதிலிருந்து விக்னேஷ் சிவன் பின்வாங்க, பலரிடமும் கதை கேட்டு இறுதியாக மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அஜித்.

ajith kumar 2

லைக்கா நிறுவனம் இப்படத்தை இயக்கி வரும் நிலையில், அஜர்பைஜானில் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இதற்கிடையில் விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் வெளியாகி வெற்றிப் போட்டது. இந்த நிலையில் தான் அவரது அடுத்தப் படத்திற்கு விஜய் 220 கோடி சம்பளம் பெற இருப்பதகாவும், அவரே அவ்வளவு வாங்கும் போது, அஜித் 165 கோடி வாங்கக் கூடாதா என எண்ணி, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு சம்பளத்தை கூட்டி இருக்கிறாராம் அஜித்.

author avatar
Archana