நம்ம தல அஜித், மைக்கேல் ஜாக்சன் உடன் இவ்வளவு நெருக்கமா?… இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. நடிகர் அஜித் சமீபத்தில் ‘ஏகே மோட்டோ ரைட்’ என்ற ஒரு நிறுவனம் ஒன்றை தொடங்கிய செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது . திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் அஜித் அவ்வப்பொழுது பைக் ரைடும் சென்று வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித் மைக்கேல் ஜாக்சன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட அரிதான புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சன் இவரைப் பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. நடனத்தில் பிரபலமான இவரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சிறு குழந்தையை கேட்டால் கூட மைக்கேல் ஜாக்சனை காட்டிவிடும். அந்த அளவுக்கு இவர் பிரபலமானவர்.

தற்பொழுது நடிகர் அஜித், மைக்கேல் ஜாக்சன் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை ஷாலினியும் காணப்படுகிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ”மைக்கேல் ஜாக்சன் உடன் நம்ம தல அஜித் இவ்வளவு நெருக்கமா?” என்று கேள்வி எழுப்பி  வருகின்றனர்.