ரொம்ப பயமா இருக்கு.. “தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்” எப்போது வீடு திரும்புவோம்..? அபுதாபியில் சிக்கிய இந்திய இளைஞரின் கண்ணீர் வீடியோ..!!

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் சிக்கியுள்ள இந்திய இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆஷு அரோரா என்ற அந்த இளைஞர், பெங்களூரு செல்லும் விமானத்தில் கேபின் குரூவாகப் பணியாற்றி வருகிறார். ஒரு சிறிய இடைவேளைக்காக (layover) அபுதாபியில் தங்கியிருந்தபோது, போர் காரணமாக திடீரென அனைத்து விமானப் போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர் அங்கேயே சிக்கிக்கொண்டார்.

தனது வீடியோவில் அங்குள்ள தற்போதைய கள நிலவரத்தைப் பகிர்ந்துள்ள ஆஷு, ஊடகங்கள் செய்திகளைப் பெரிதுபடுத்துவதாகப் பலர் கூறினாலும், உண்மையில் நிலைமை அதையும் விடக் கொடூரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அபுதாபி தெருக்களில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும், மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாகவும் அவர் விவரித்துள்ளார். குறிப்பாக, தனது தலைக்கு மேலேயே ஏவுகணைகள் கடந்து செல்வதைக் காண்பது மிகவும் பயங்கரமான அனுபவமாக இருப்பதாக அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உணவு மற்றும் தங்குமிடம் இன்றித் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களைப் பத்திரமாக தாயகம் அழைத்து வரவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில், போர்ப் பதற்றத்தால் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்குவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

Soundarya

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

7 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

8 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago