மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்.. தமிழகம் முழுவதும் பரந்த திடீர் உத்தரவு..!

By Nanthini on ஆனி 10, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் கொரோனா பரவல் என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு பொதுமக்களை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என எச்சரித்துள்ளது. பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் டெங்கு, கொரோனா, இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவல் இருப்பதால் மாணவர்களின் உடல் நிலையை கண்காணிக்க பள்ளி கல்வித்துறைக்கு DPH உத்தரவிட்டுள்ளது. காய்ச்சலுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான மற்ற மாணவர்களுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால் காய்ச்சல் உள்ள மாணவர்கள் விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுக்கவும் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.