ஒவ்வொரு வருடமும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை லட்சக்கணக்கில் இளைஞர்கள் எழுதி வருகின்றனர். பலருக்கு பல விதமான கதைகள் உள்ளன. குடும்ப வறுமை, கல்வி, இழப்பு, சோர்ப்பு, சலிப்பு உள்ளிட்ட பல காரணங்களில் பலர் வெற்றியின் கதவை திறப்பதற்கு முன்பே பின் வாங்க வேண்டிய நிலைக்கு செல்கின்றனர். இவரக்ளுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக அரசின் குடிமைப் பணி பயிற்சி மையத்தில் நடப்பு வருடத்தில் யுபிஎஸ்சி மெயின் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. விண்ணப்பித்த தேவர்கள் அனைவருக்கும் கட்டணம் இல்லா உண்டு உறைவிட வசதியோடு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பானது www.civilservicescoaching.com என்ற இணையதளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
