சினிமாவை பொறுத்த வரையில் காலம் தான் நம்மை நகர்த்திச் செல்லும். அதாவது காமெடி நடிகராக இருந்தவர்கள் திடீரென்று ஹீரோவாக மாறிவிடுவார்கள். ஹீரோவாக இருப்பவர்கள் திடீரென வில்லனாக மாறுவார்கள். அப்படியே ஹீரோயினியாக ஜொலித்த சில நடிகைகளும் ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுப்பார்கள். அதனால் காலத்திற்கு ஏற்றவாறு சினிமாவில் ஒவ்வொருவருடைய பயணமும் மாறிக்கொண்டே இருக்கும். இப்படியான நிலையில் சினிமாவில் எந்தெந்த நடிகைகள் இயக்குனர்களாக மாறி உள்ளார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பானுமதி:
தமிழ் சினிமாவில் தலைசிறந்த பெண்மணியாக திகழ்ந்தவர் தான் நடிகை பானுமதி. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் பாடகி என பன்முக திறமை கொண்டவராக இருந்தார். திரை உலகில் இவருடைய பங்களிப்புக்காக 2003 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இவர் நடிகையாக பல சாதனைகளைப் பெற்றிருந்தாலும் இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார். இவர் 1953 ஆம் ஆண்டு முதன் முதலாக சந்திராணி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்த நிலையில் அந்த திரைப்படம் வெற்றிபெற அடுத்து பெரியம்மா என்ற பெயரில் மற்றொரு படத்தையும் இயக்கினார். மேலும் ரத்தினமாலா, லைலா மஜ்னு மற்றும் காதல் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

லட்சுமி:
தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் உயிர் கொடுக்க முடியுமென்று இவரை தவிர யாராலும் பண்ண முடியாது என்ற விம்மத்தை உருவாக்கியவர் தான் நடிகை லட்சுமி. தன்னுடைய குரல் மற்றும் முக பாவனை என அனைத்திற்கும் ஏற்றது போல கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார். இன்று வரை இவருக்கு தனி ஒரு மரியாதை சினிமாவில் இருந்து வரும் நிலையில் ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படம் மூலமாகத்தான் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்:
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த சிறந்த நடிகை என்ற பெயரை பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார். பல முன்னாடி நடிகர்களின் படங்களில் அம்மா கேரக்டரில் நடித்த இவ்வாறு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/z1919.jpg)
ஸ்ரீப்ரியா:
தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகையான ஸ்ரீபிரியா பானுமதியை போல் கேரக்டர் என்று சொல்லலாம். தைரியமான பெண்ணாக வளம் வந்த இவர் இதுவரை எந்த ஒரு நடிகருடனும் கிசுகிசுவில் சிக்க வில்லை. தற்போது கமலின் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார்.

தேவயானி:
90 காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர்தான் தேவயானி. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் தலைகாட்டியை இவர் தற்போது இயக்குனராகவும் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் கைகுட்டை ராணி என்ற திரைப்படத்தை இவர் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
