Connect with us

நயன்தாரா பிசினஸ்க்கு போட்டியாக களம் இறங்கும் தமன்னா…. ஆனா இவங்க ரூட்டு வேற….!!!!

CINEMA

நயன்தாரா பிசினஸ்க்கு போட்டியாக களம் இறங்கும் தமன்னா…. ஆனா இவங்க ரூட்டு வேற….!!!!

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தற்போது ஹிந்தி சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய், அஜித் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.

   

சமீபத்தில் இவர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். அதில் இவர் ஆடிய காவலா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இந்தி வெப் சீரியஸ்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜப்பான் நிறுவனமான ஷிஷீடோ என்ற அழகு சாதன நிறுவனத்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தமன்னா தெரிவித்திருந்ததாவது “நூற்றாண்டுக்கும் மேலாக தனது தரத்தை தொடர்ந்து பராமரித்து வரும் ஷிஷீடோ நிறுவனத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. அழகு என்பது வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்தமேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது என்று நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இதை பார்த்த பலரும் நயன்தாராவுக்கு போட்டியாக தமன்னாவும் வந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள். ஏனென்றால் சமீப காலமாக படங்களில் மட்டும் இல்லாமல் அழகு சாதனம் பொருட்கள் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் தான் இவரின் நயன் ஸ்கின் என்கின்ற புது நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தொடர்பான பிரமோஷன் பணிகளில் கூட அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு போட்டியாக தமன்னா இறங்கி இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top