பாட்டு ஹிட்டு… தயாரிப்பாளருக்கு கோடி கோடியா வசூல்.. ஆனா TMS மார்க்கெட்டையே காலி பண்ணிய Tராஜேந்தர்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.

   
TMSStreet 240323

ஆனால் டி எம் எஸ் தன்னுடைய மார்க்கெட் காலியானதற்கு வேறு ஒரு காரணத்தைக் கூறியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் “என்னுடைய மார்க்கெட் காலியானதற்கு ஒரு தலை ராகம் படத்தில் நான் பாடிய பாடல்கள்தான் காரணம்” என்று கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் “அந்த படத்தில் இயக்குனர் டி ராஜேந்தர் என்னை ‘நான் ஒரு ராசியில்லாத ராஜா’ என்ற பாடலை பாடவைத்தார். நான் எவ்வளவோ சொன்னேன். என் வாயாலேயே ‘நான் ஒரு ராசியில்லாத ராஜா’ என்று வருகிறதே என்று. ஆனால் அவர் அது படத்தில் ஹீரோ பாடுவதுதானே சார் என்று சொல்லி பாட வைத்தார்.

tr 1653368342

அதோடு மட்டும் விடவில்லை. அதே படத்தில் என் கதை முடியும் நேரமிது என்ற பாடலையும் பாடவைத்தார். அதோடு முடிந்தது. படம் நன்றாக ஓடி தயாரிப்பாளர் கோடி கோடியாக சம்பாதித்தார். என் மார்க்கெட் காலியானது” எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலம் வரை இதுபோல நெகட்டிவ் செண்ட்டிமெண்ட் பார்க்கும் வழக்கம் எல்லாம் இருந்தது என்பது டி எம் எஸ்ஸின் இந்த கருத்து ஒரு உதாரணம். இளையராஜா அன்னக்கிளி படத்துக்காக ரெக்கார்ட் செய்யும் போது மின்சாரம் கட் ஆனதால் அவரை நீக்கிவிட வேண்டும் என சொன்னவர்களும் அப்போது இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar