BREAKING: இரவில் கூட்டணி மாறினர்.. சசிகலா – ராமதாஸ் கூட்டணிக்கு விழுந்த பலத்த அடி…. குஷியில் அன்புமணி….!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும் உட்கட்சி நகர்வுகளும் வேகம் எடுத்துள்ள நிலையில், சசிகலா – ராமதாஸ் கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புதுச்சேரி பாமக பொருளாளர் கணபதி, சோளிங்கர் அ. மா. கிருஷ்ணன் மற்றும் உளுந்தூர்பேட்டை ஜெகன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளது ராமதாஸ் தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

   

அதேசமயம், கடந்த காலங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த மறைந்த ஜே. குருவின் மகன் கனலரசன், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜெயங்கொண்டம் பாமக வேட்பாளர் வைத்திக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ள நிகழ்வு, வன்னியர் வாக்கு வங்கியை ஒருங்கிணைப்பதில் அன்புமணி தரப்பிற்குப் கூடுதல் பலத்தை அளித்துள்ளது.