ஐய்யோ… என் உயிர் போனாலும் பரவாயில்லை… முதியவரை மீட்கப் பாய்ந்து உயிரை விட்ட … துணிச்சல் நாயகன்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஆவணி 6, 2026

Spread the love

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மீந்துள்ளி பகுதியில் காரியங்கோட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 61 வயது முதியவர் ஒருவர் சிக்கிக்கொண்டார். தகவலறிந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயதான ராஜேஷ், தனது நண்பர்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். இவர் ஒரு தொழில்முறை நீச்சல் மற்றும் சாகசப் பயிற்சி வீரர் ஆவார்.

வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரைக் காப்பாற்றும் நோக்கில், ராஜேஷ் சிறிதும் தயங்காமல் துணிச்சலுடன் ஆற்றில் குதித்தார். ஆனால், ஆற்றில் நிலவிய மிகப்பலத்த நீரோட்டம் காரணமாக எதிர்பாராதவிதமாக அவரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

   

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் ராஜேஷைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மூன்று நாட்களுக்குப் பின் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது. முதியவரைக் காப்பாற்ற முயன்ற அவரது வீரமும் தியாகமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.