அடபாவமே..! தாயை கொன்ற மகன்… ஊரையே மிரட்டிய ‘லேடி டான்’… கள்ளக்காதல் சந்தேகம்… சொந்த மகனே போட்ட ஸ்கெட்ச்… 15 மாத திகில் நாடகம் அம்பலம்…!!

By Gayathri on புரட்டாதி 28, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த மாதராம்புராவைச் சேர்ந்த சீமா சவுத்ரி, அப்பகுதி மக்களால் ‘மிண்டு சவுத்ரி’ என அறியப்பட்டார். ஆண்களைப் போலவே தலைமுடி வெட்டி, பேண்ட் மற்றும் சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டி வந்த இவர், சிறுவயதிலேயே ரவுடிகளுடன் ஏற்பட்ட பழக்கத்தால் பல்வேறு குற்றச் செயல்களில் இறங்கினார். 2009-ஆம் ஆண்டு முதல் அடிதடி, மிரட்டல், பணம் பறிப்பு என 11 வழக்குகளில் சிக்கி, அந்த ஊரே அஞ்சும் வகையிலான ஒரு ‘லேடி டானாக’ வலம் வந்தார்.

இவருக்கும் லாலா ராம் என்பவருக்கும் திருமணம் முடிந்து ஹரி ஓம் என்ற மகன் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது 20 வயது மகனுடன் மிண்டு சவுத்ரி வசித்து வந்தார். இந்தச் சூழலில், கடந்த 2025 மே மாதம் முதல் இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து உறவினர்கள் கேட்டபோதெல்லாம், தனது தாய் வழக்கொன்றில் கைதாகி சிறையில் இருப்பதாக அவரது மகன் நாடகமாடியுள்ளார். பின்னர் சிறையில் அவர் இல்லை என்பது சகோதரி ஒருவருக்குத் தெரியவந்ததையடுத்து, காவல்நிலையத்தில் மாயம் எனப் புகார் அளிக்கப்பட்டது.

   

வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், சமீபத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் அவரது உடல் பெட்ஷீட்டில் சுற்றப்பட்டுக் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கணவர் மற்றும் மகனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மிண்டு சவுத்ரிக்கு வேறு நபருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தால் கணவனும், அவர் தன்னைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய ஆத்திரத்தில் மகனும் இணைந்து அவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பின்னர் சடலத்தை அவரது ஆட்டோவிலேயே கொண்டு சென்று கிணற்றில் வீசிவிட்டு, 15 மாதங்களாகச் சிறையில் இருப்பதாகப் பொய் சொல்லி வந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.