தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன் தான் சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவரது சகோதரர் கார்த்தியும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு தனது 22 வது வயதில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சூர்யா. 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். தொடர்ந்து மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன் போன்ற திரைப்படங்களில் நடித்தார் சூர்யா. வாரணமாயிரம், அயன், ஏழாம் அறிவு, சூரரைப் போற்று, ஜெய்பீம் போன்ற கமர்சியல் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் சூர்யா.
இவரது திரைப்படங்கள் வெளி வருகிறது என்றாலே ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். வித்தியாசமான கெட்டப்பில் வருவார் சூர்யா. இவரை மிகவும் பிரபலமாக்கியது சிங்கம் பட தொடராகும். சிங்கம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய படங்கள் இவருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தது. தமிழ் சினிமாவில் 2000களின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த சூர்யா 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
தற்போது சூர்யா ஜோதிகாவின் மூத்த மகளான தியா பெண்களை maiyamaga கொண்ட கதையை வைத்து Student Doumentary படத்தை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அதை ஜோதிகா தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தனது மகளுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்து கூறி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று பேசி வருகின்றனர்.