மொட்டை அடித்துவிட்டு மகளுடன் திருப்பதி கோவிலை வலம் வந்த விஜய் பட நடிகை.. வைரலாகும் வீடியோ..

By Mahalakshmi on ஜனவரி 10, 2024

Spread the love

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி, ஒரு இந்திய நகைச்சுவை நடிகையாவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை கதாநாயகியாக நடித்துள்ளார். சில வருடங்களாகவே இவரின் முகம் திரைப்படத் துறையில் காணவில்லை. தற்போது இவர் தனது மகளுடன் திருப்பதி  கோவிலில் மொட்டை அடித்து தரிசனம் செய்து வந்த காட்சி  இணையத்தில் விடியோவாக  வைரலாகி வருகிறது.

   

நடிகை சுரேகா வாணி தமிழ் படங்களை விட தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நாட்களிலேயே குழந்தை நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து உள்ளார். மேலும்  மா தொலைக்காட்சியில் ‘மா ட்டாகிஸ்’, ‘ஹார்ட் பீட்’ போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளார். 2005 ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில்  முதலில் நடித்துள்ளார். இவர் 2010 இல் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் துணை கதாநாயகியாக அறிமுகமானார்.

   

இந்த படத்தில் அவரின் காமெடியான நடிப்பால் வெளி உலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் காதலில் சொதப்புவது எப்படி , தெய்வத்திரு மகள் , ஜில்லா, விஸ்வாசம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  சுரேகா வாணி  வயதில் அதிகமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்புத் திறமையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு வரை 48 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

திரைப்படங்களில் குடும்பப் பெண்ணாகவே எப்போதும் நடிக்கும் இவர்  நிஜ வாழ்க்கையில் மாடலாக தான் வாழ்ந்து வருகிறார். கணவன் இறந்த பின்பு சுரேகா வாணி மறுமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகின. இதனை மறுத்த சுரேகா வாணி  ” நான் என்னுடைய குழந்தையுடன் சந்தோஷமாக தான் இருக்கிறேன்” எனக்கு மறுமணம் தேவை இல்லை என்று  கூறினார். இது போன்ற வதந்தியை பரப்பாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகை சுரேகா வாணி அவ்வபோது instagramல் தனது மகளுடன் சேர்ந்து ரீல்ஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு சுரேகா தன் மகளுடன் ஆனந்தமாக இருக்கிறார்  என்று தெரிகிறது. தற்போது நடிகை சுரேகா வாணி தனது மகளுடன் திருப்பதி  கோவிலுக்கு  மொட்டை அடித்து சென்று தரிசனம் செய்யும்  வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.