சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த டிவி விளம்பரம்… அதுவும் இந்த பிராண்டா?… செம மாஸா இருக்கே… என்ன ஸ்டைலு… என்ன ஸ்டைலு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த டிவி விளம்பரம்… அதுவும் இந்த பிராண்டா?… செம மாஸா இருக்கே… என்ன ஸ்டைலு… என்ன ஸ்டைலு…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் வெளிவந்தாலே அவரது ரசிகர்களுக்கு அன்றைய நாள் திருவிழா தான். இப்படி ரசிகர்களின் மனதை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இவர் பெரிதாக எந்த விளம்பர படங்களிலும் நடித்ததில்லை. ஆனால் இவரைப் பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் 1980 இல் வெளிவந்த விளம்பர படமொன்றில் நடித்திருக்கிறார். அதாவது இவர் 1980ல் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு குளிர்பான கம்பெனியின் விளம்பரத்தில் நடித்துள்ளாராம். இந்த குளிர்பானத்தின் பெயர் பாம் கோலா. இது தமிழ்நாடு அரசு விநியோகம்  செய்த குளிர்பானம் என்று கூறப்படுகிறது.

இந்த விளம்பரத்தில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருந்து குளிர்பானத்தை குடிப்பது போன்று  இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.  அவருடன் ஒரு நடிகையும் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஒரே ஒரு விளம்பர படம் இது மட்டும்தான் என்று கூறப்படுகிறது. விளம்பர படங்களிலேயே நடிகர் ரஜினிகாந்த் நடித்ததில்லை என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Begam