பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனர்களுக்கு கொடுத்த சூப்பர் அட்வைஸ்!… என்ன சொன்னாருன்னு தெரியுமா?…

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனர்களுக்கு கொடுத்த சூப்பர் அட்வைஸ்!… என்ன சொன்னாருன்னு தெரியுமா?…

இயக்குனர் லோகேஷ் கனராஜ் இளம் இயக்குனர்களுக்கு பேட்டி ஒன்றில் கொடுத்த அறிவுரை தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியின் ‘கைதி’, இளைய தளபதி விஜய் உடன் ‘மாஸ்டர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக இவர் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய  இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இளைய தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ‘தளபதி 67’ படத்தில் இருவரும் இணைந்துள்ளனர் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படம் முழுவதுமாக லோகேஷ் படமாக இருக்கும் என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் ‘தளபதி 67’ படத்தின் பூஜையும் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் செல்லும் இடங்களில் எல்லாம் விஜய் ரசிகர்கள் தளபதி 67 அப்டேட் கேட்டு வருகின்றனர். அதற்கு அவரும் விரைவில் அப்டேட் தருவதாக கூறிவிட்டு சென்று வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனராஜ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவரிடம் நிருபர் ‘இளம் இயக்குனர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை என்ன?’ என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அவர் ‘யாருடைய அறிவுரையும் கேட்காதீர்கள். முதலில் நீங்கள் எந்த மாதிரியான படத்தை உருவாக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களின் முதல் படம் தான் நீங்கள் யார் என்று நிரூபிக்கும். அதனால் கதையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்’ என்று கூறியுள்ளார். இவ்வாறு இளம் இயக்குனர்களுக்கு தனது சூப்பர் அட்வைஸை கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Begam