விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

By Priya Ram on ஜூலை 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில் விழுந்தேன் படத்தில் நடித்தார். இதுதான் தமிழில் சுரேனாவின் முதல் திரைப்படம். இதனையடுத்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை, சமர், வன்மம் தெறி உள்ளிட்ட படங்களிலும் சுனைனா நடித்தார். மேலும் ஒரு சில வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சுனைனா நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுனைனா தனக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் தனது வருங்கால கணவர் யார் என்பது குறித்து சுனைனா எந்த தகவலையும் கூறவில்லை. தற்போது வந்த தகவலின் அடிப்படையில் சுனைனாவுக்கும் துபாயை சேர்ந்த யூட்யூபரான கலில் அல் அமேரி என்பவருடன் சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது தெரியவந்துள்ளது.

   

 

கலிலும் தனக்கு நிச்சயம் ஆன தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. திருமணத்திற்காக கலில் இந்தியா வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் திடீர்னு இப்படி அறிவித்து ஷாக் கொடுத்துட்டீங்களே? எங்க இருந்தாலும் நல்லா இருங்க என சுனைனாவை டேக் செய்து சமூக வலைதளத்தில் புலம்பி வருகின்றனர்.

சுனைனா திருமணம் செய்து கொள்ளும் கலில் சொந்தமாக youtube சேனலை நடத்தி வருகிறார். அந்த சேனலை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்கின்றனர். கலிலுக்கு இது இரண்டாவது திருமணம். அவரது முதல் மனைவி சலமா முஹம்மத். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். கலில் நடிகை சுனேனாவை இரண்டாவதாக திருமணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.