எதிர்நீச்சல் சீரியலின் 2-வது பாகம்..? அதுவும் சன் டிவில இல்லையாம்.. ரசிகர்களுக்கு விரைவில் கிடைக்கப் போகும் குட் நியூஸ்..!

By Mahalakshmi on ஆனி 15, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் விரைவில் எடுக்கப்பட உள்ளதாக புது தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது சீரியலுக்கு பெயர் போனது சன் டிவி தான். விஜய் டிவியின் சன் டிவியும் எப்போதும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். சன் டிவிக்கு வலு சேர்க்கும் வகையில் ஒளிபரப்பான சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கியிருந்த இந்த சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

   

   

கோலங்கள் சீரியலுக்கு பிறகு அவர் இயக்கிய எந்த சீரியலும் பெருமளவு வரவேற்பு தரவில்லை. ஆனால் எதிர் நீச்சல் சீரியல் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மற்ற சேனல் தரப்பினரிடையே பொறாமையை ஏற்படுத்தும் அளவிற்கு மிகப் பிரபலமானது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய பிளஸ்சே ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த அசத்திய மாரிமுத்துதான்.

 

அவரின் இறப்புக்குப் பிறகு சீரியல் அந்த அளவுக்கு நல்ல வரவேற்பு பெறவில்லை ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படிப்படியாக குறைய தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இதில் நடித்த நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களது வருத்தங்களை சமூகவலை பக்கத்தில் அறிவித்து வந்தார்கள். இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்குமா? தொடங்காத என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கும் என கூறப்படுகின்றது. முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பானதை தொடர்ந்து சேனல் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்த காரணத்தினால் திருச்செல்வம் இந்த சீரியலை முடித்துவிட்டு சென்றார்.

மேலும் இந்த சீரியல் முடிந்த கையோடு மகளின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி முடித்து இருக்கின்றார் திருசெல்வம். இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வருமா இல்லையா என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் வரவேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.