Connect with us

சன் டிவி உருவாக இதுதான் காரணம்… வீடியோ கேசட் செய்த அதிசயம்… பக்காவா பிளான் போட்ட கலாநிதி மாறன்…!!

CINEMA

சன் டிவி உருவாக இதுதான் காரணம்… வீடியோ கேசட் செய்த அதிசயம்… பக்காவா பிளான் போட்ட கலாநிதி மாறன்…!!

 

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமானது சன் டிவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலாநிதி மாறனின் சன் டிவி இப்போது பிரபலமாக இருக்கிறது. சீரியலாகட்டும் படமாகட்டும் நட்சத்திர நிகழ்ச்சிகளாகட்டும் சன் டிவிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கும்.

பலரது வீட்டிலும் சன் டிவி கண்டிப்பாக தொடர்ந்து பார்க்கப்படும் சேனலாக இருக்கும். ஆனால் இந்த சன் டிவியை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கலாநிதி மாறனுக்கு எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. சன் டிவி தான் முதல் தனியார் சேனலாக உருவெடுத்தது.

   

இந்த சேனலுக்கு அடித்தளம் என்ன என்பது தெரியுமா? அமெரிக்காவில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த கலாநிதிமாறனுக்கு அங்கு ஏராளமான தனியார் சேனல்கள் இருப்பதைப் பார்த்ததும் தனியார் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை தோன்றியது.

 

அதனை எப்படி இந்தியாவில் செயல்படுத்துவது என்று யோசித்தவர் முதல் கட்டமாக பூமாலை என்ற வீடியோ கேசட் ஒன்றை தயார் செய்தார். அந்த கேசட்டில் நட்சத்திரங்களின் பேட்டி, பாடல்கள், படத்தொகுப்பு உள்ளிட்டவைகளை பதிவு செய்து வெளியிட்டார். அதற்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பு தான் இன்று சன் டிவி இந்த அளவிற்கு விருட்சமாக வளர்ந்ததற்கு காரணம் என்று கூறலாம்.

author avatar
indhuramesh
Continue Reading
To Top