‘மகிழ்ச்சியான தருணம்’… சிஎஸ்கே வெற்றியை குடும்பத்தோடு கொண்டாடிய சுஜாவருணி… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சுஜா வருணி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். தற்பொழுது இவர் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதை கொண்டாடிய தருணத்தை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

   

தற்போது சிஎஸ்கே அணி ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை சிஎஸ்கே ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்துள்ளது. டாஸ் வென்ற கேப்டன் தோனி மழை பெய்யும் என்பதால் இரண்டாவது பேட்டிங் செய்தால் சாதகமாக இருக்கும் என்று கருதி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

இதைத்தொடர்ந்து மழையால் ஆட்டம் தடைப்பட்டது .2 மணி நேரத்திற்கு பிறகு இரவு 12 10 மணிக்கு போட்டி தொடங்கியது. இதை தொடர்ந்து விளையாடிய  சிஎஸ்கே அணிக்கு கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது ஜடேஜா யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு சிக்ஸரும், கடைசி பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட பௌண்டரி அடிக்க சிஎஸ்கே வீரர்கள் வெற்றி உற்சாகமாக மைதானத்தில் வந்து கொண்டாடினார்.

தற்பொழுது  இந்த வெற்றியை சுஜாவருணியும் அவரது குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதனை அவர் தற்பொழுது விடியோவாக இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Shiva Kumarr (@shivakumarr20)