மகனைக் கண்டு பயப்படும் இயக்குனர் மணிரத்னம் .. உண்மையை உடைத்த சுஹாசினியின் பெற்றோர்..

By Deepika

Updated on:

சினிமா உலகில் அனைவரும் மதிக்கும் இயக்குனர் மணிரத்தினமே அவர் மகனை கண்டால் பயப்படுவார் என கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.

Mani Ratnam

பான் இந்தியா என்ற வார்த்தை உருவாவதற்கு முன்பே பான் இந்தியா படம் செய்து வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்தினம். பல்லவி அணு பல்லவியில் தொடங்கி பொன்னியின் செல்வன் வரை அவரின் திரைப்பயணம் நீண்டது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை கொண்டவர் மணிரத்னம். சினிமாவில் காதலுக்கு புது இலக்கணம் கொண்டு வந்தவர்.

   
Nandan Maniratnam

பெண்களை தைரசியசாலிகளாகவும், தேவதைகளாகவும் காட்டிய பெருமை இவரையே சாரும். மணிரத்தினம் காதல் படங்களுக்கு பெண்கள் அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது. சக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் என அனைவருக்கும் மணிரத்னம் மீது பயம் கலந்த மரியாதையை உண்டு. அப்படிப்பட்ட மணிரத்னம் அவரின் மகனை கண்டு பயப்படுகிறார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா.

Nandan Maniratnam and Suhasini Maniratnam

இதுகுறித்து மனம் திறந்துள்ளார் மணிரத்தினத்தின் புகுந்த வீட்டார். இயக்குனர் மணிரத்னம் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். நடிகை சுஹாசினி கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் ஆவார். சமீபத்தில் சுஹாசினி பெற்றோர் அளித்த பேட்டியில் மணிரத்தினம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

Nandan Maniratnam

அவர்கள் கூறியுள்ளதாவது, மணிரத்னம் ரொம்ப அடக்கமானவர், அன்பானவர் சின்ன சின்ன விஷயங்களை கூட ரசிக்கும் மனிதர். அவர் அவரின் மகன் நந்தனை கண்டனம் பயப்படுவார். நந்தன் அத்தனை புத்திசாலி. அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது. அனைத்தும் கற்றவன். அதனால் மகனிடம் அடக்கி வாசிப்பார் மணிரத்னம் என யாரும் அறியா உண்மையை கூறியுள்ளனர் சுஹாசினி பெற்றோர்.

author avatar
Deepika