பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. கல்லூரியிலேயே தீக்குளித்த மாணவி … அதிர்ச்சி வீடியோ…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

ஒடிசாவில் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் நகரில் உள்ள பாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர் குமார் சாஹீ என்ற ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை முதல் தேதியில் மாணவி புகார் அளித்துள்ளார். தன்னை பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும் மிரட்டியதாகவும் ஆசிரியர் மீது மாணவி புகார் அளித்திருந்தார். இருந்தாலும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்தாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோலை ஊற்றி மாணவி தீக்குளிக்க முயற்சித்தார். மாணவியை காப்பாற்ற முயன்ற மாணவர்கள் மீதும் தீ பற்றியது. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 90% தீக்காயங்களுடன் மாணவியும் காப்பாற்ற முயன்ற மாணவர்கள் 70% தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.