இதை பாருங்க..! ஒரு சிறு செயல், பெரிய மாற்றம்… அமெரிக்க கணவர் பெருமை… இந்திய மனைவியின் செயல்… இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்…!!

By Gayathri on ஐப்பசி 4, 2026

Spread the love

தாய்லாந்தில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவர், தனது இந்திய மனைவி குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. விடுதியிலிருந்து தங்களது அறையை காலி செய்து வெளியேறும்போது, தனது மனைவி அந்த அறையை எப்படி விட்டுச் சென்றார் என்பதையும், அங்குள்ள தூய்மைப் பணியாளர்களுக்காக அவர் செய்த ஒரு சிறிய செயலையும் சுட்டிக்காட்டி அந்த நபர் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

பொதுவாக விடுதியில் தங்குபவர்கள் அறையைக் காலி செய்யும்போது பொருட்களைச் சிதறடித்தோ அல்லது குப்பையாகவோ விட்டுச் செல்வது வழக்கம். ஆனால், இவருடைய மனைவி அறையை மிகவும் நேர்த்தியாகவும், பொருட்களை அதனதன் இடத்திலும் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டே வெளியேறியுள்ளார். குறைவான ஊதியத்தில் நேரம் காலம் பார்க்காமல் கடினமாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் விதமாகவே அவர் இவ்வாறு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டு மக்களை அல்லது சமூகத்தினரை முத்திரை குத்தி எடைபோடாமல், ஒவ்வொருவரையும் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டு மதிக்கத் தொடங்க வேண்டும் என்ற ஆழமான கருத்தையும் அவரது கணவர் இதில் முன்வைத்துள்ளார்.

   

இந்த சம்பவம் இணையவாசிகளிடையே இருவேறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது. பலர் இந்த பெண்ணின் செயலை அடிப்படை மனிதநேயம் என்றும், சக மனிதர்களுக்கான மரியாதை என்றும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், விடுதி அறையை சுத்தம் செய்வதற்காகவே நாம் கட்டணம் செலுத்துகிறோம், எனவே வாடிக்கையாளர்கள் இதற்காக மெனக்கெடத் தேவையில்லை என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இருப்பினும், இது போன்ற சிறு சிறு நற்செயல்களும், கருணையும் மற்றவர்களின் கடினமான நாளை இனிமையாக மாற்றும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.