லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய ஸ்டாலினை, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் இன்முகத்தோடு வரவேற்றனர். எனினும், திமுக கள ஆய்வுக்குழு அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவையிலும் கட்சிப் பதவிகளிலும் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதால், தங்களில் யாருடைய பதவி பறிபோகுமோ என்ற ஆழ்ந்த கலக்கத்துடனும் அச்சத்துடனும் சில நிர்வாகிகள் இந்த வரவேற்பில் கலந்து கொண்டதாக அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
இன்று அல்லது நாளை அண்ணா அறிவாலயத்திற்குச் செல்லவிருக்கும் ஸ்டாலின் , இந்த ஆய்வறிக்கை குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்த உள்ளார் என்றும், அதன் தொடர்ச்சியாகச் செயல்திறன் குறைந்த நிர்வாகிகள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் பாயக்கூடும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
