எல்லாரும் அந்த படத்துக்கு நீ செட்டாக மாட்டேன்னு சொன்னாங்க.. ஆனா கிளைமாக்ஸ்ல நான் நடிச்சத பார்த்து இயக்குனர் என்ன கட்டிப்புடிச்சு அழுதாரு.. மனம் திறந்த ஸ்ரீகாந்த்..!!

By Priya Ram on ஜூலை 1, 2024

Spread the love

90’S காலகட்டத்தில் இருந்து தனி தமிழ் சினிமாவில் இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் ரோஜா கூட்டம் படம் ரிலீஸ் ஆனது. முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி ஸ்ரீகாந்த் நடித்தார். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, பம்பரக் கண்ணாலே, சதுரங்கம், நண்பன் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.

Srikanth (actor, born 1979) - Wikipedia

   

ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் ஸ்ரீகாந்த் தனது மார்க்கெட்டை இழந்தார். சமீபத்தில் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, சசி இயக்கிய பூ படத்தில் நான் நடித்தேன். அந்த கேரக்டருக்கு நான் செட்டே ஆக மாட்டேன் என அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் உட்பட எல்லாரும் கூறினார்கள். சசி சார் என்கிட்ட வந்து இந்த மாதிரி ஒரு படம் பண்ணனும்னு சொன்னாரு. அவர் தான் என்ன அறிமுகப்படுத்தினார்.

   

POO MUSIC REVIEW - Behindwoods.com - actor Srikanth Parvathy Director Sasi  Music S.S.Kumaran Nesagee Cinemas banner Mirdula Srimathi Harini Tippu  Karthik Chinmayee Parthasaradhy Lyrics Na.Muthukumar Images Gallery Stills

 

எனக்கு என்ன படம் ஏதுன்னு எல்லாம் தேவையில்லை. அவருக்காக நான் பண்ணேன். என்னோட அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லாரும் நீ இதுக்கு செட் ஆக மாட்டேன்னு சொன்னாங்க. அவங்களுக்கு நிரூபிக்கிறதுக்காக நீ இந்த படத்தை நல்லா பண்ணனும் அப்படின்னு சசி சார் சொன்னாரு. இந்த படத்தை சேலஞ்சா எடுத்துக்கணும்னு சொன்னாரு. படத்துல இடம் பெற்ற எல்லா காட்சிகளுக்கும் நான் ஒன் டேக் தான் எடுத்தேன்.

Poo - Srikanth and Parvathy in Poo - Indian Bollywood, South Indian Movie  Photo Gallery

இரண்டு மூன்று டேக்குகள் டெக்னிகால் ஆகுமே தவிர என்னால் ஆகாது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் சீன சிங்கிள் டேக்ல பண்ணி முடிச்சேன். ஹீரோயின் தொட்டிக்கு பின்னாடி ஒளிஞ்சிருப்பாங்க. நான் போன்ல பேசுறது ஒட்டு கேட்டிருப்பாங்க. நான் அதை பார்த்திருப்பேன். அது சிங்கிள் ஷாட்ல நான் பண்ணேன். கிளைமாக்ஸ் சீன பாத்துட்டு சசி சார் அழுதுட்டு வந்து கட்டிப்புடிச்சு எனக்கு நன்றி சொன்னார். நீ என்னை பெருமைப்படுத்திட்டேன்னு சொன்னாரு. ஒரு ஆர்ட்டிஸ்ட் அதுதான் வேணும் என பேசியுள்ளார்.

Poo Tamil Movie Trailer | Review | Stills