ரேஷன் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அது தகுந்த அதிகாரியின் மூலம் பொதுவிநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது . இந்த நிலையில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான சிறப்பு முகமானது நாளை இரண்டாவது சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய குடும்ப அட்டை பெறுதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் குறைகள் இருந்தால் மனு செய்து பயன்பெறலாம்.
