“நல்ல மரியாதை போங்க…” DMK-வை விட்டு விலகியதற்கு இதுதான் பரிசா?… நாஞ்சில் சம்பத் சொன்ன அதிரடி வார்த்தை… மேடையில் வெடித்த சர்ச்சை… அரசியலில் திடீர் பூகம்பம்…!

By Visaka on ஆடி 21, 2026

Spread the love

தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்களும், விவாதங்களும் தொடர்ந்து சூடுபிடித்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக, பின்னர் அக்கூட்டணியில் இருந்து விலகியதோடு, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவும் திமுகவை மேடைக்கு மேடை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், 1994-ல் வைகோ தொடங்கிய அரசியல் மாற்றத்தை இன்று விஜய் சாதித்துக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், “இன்றைக்கு விஜய் காலடியில் வைகோ விழுந்து கிடக்கிறார்” எனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் சம்பத்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், வைகோவிற்கு தனது எக்ஸ் தளப் பதிவின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்தபோது தங்களுக்குச் சரியான மரியாதை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வந்த வைகோ, தற்போது தவெகவை ஆதரிக்கும் நிலையில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரே அவரை “விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார்” என்று பேசியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். “நல்ல மரியாதை!!” என்று கிண்டல் தொனியில் பதிவிட்டுள்ள சுப.வீரபாண்டியன், கூட்டணி மாறியும் வைகோவிற்கு தவெகவில் கிடைத்துள்ள ‘மரியாதை’ இதுதானா என்ற கேள்வியை முன்வைத்து அக் கட்சியினரைச் சாடியுள்ளார்.